இராமேஸ்வரத்தில் இராமபிரான் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். அதன் பின்னர் அனுமன், அந்த லிங்கத்தை தனது ஊரான சித்ரகூடத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார். அதனால் லிங்கத்தை தனது வாலால் பெயர்த்தெடுக்க முயன்றார். அந்த முயற்சியில் அவரது வால் அறுந்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான், 'உனது சக்தியும் இழந்து போகட்டும்' என்று சாபமிட்டார்.
அனுமன் சாப விமோசனம் கேட்க, 'எந்த இடத்தில் செல்லும்போது உனது வால் வளர்கிறதோ, அங்கு சிவபூஜை செய்து வழிபடு. அந்த தலம் உனது பெயராலேயே அழைக்கப்படும்' என்று அருளினார் சிவபெருமான். ஆஞ்சநேயர் வழிபட்டு சாப விமோசனம் இத்தலம் 'குரக்குக்கா' என்ற அழைக்கப்படுகிறது.
மூலவர் 'குந்தளேஸ்வரர்', 'குண்டல கர்ணேஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'குந்தள நாயகி', 'ஏலாசௌந்தரி அம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
அகத்தியர், மார்க்கண்டேயர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் அனுமனுக்கு சிறப்பு அர்ச்சனையும், ஒவ்வொரு அமாவாசை அன்று கார்யசித்தி யாகமும் நடைபெறுகிறது. கோயிலின் அருகில் கணபதி நதி ஓடுகிறது. இதுவே தல தீர்த்தமாகும்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|